புதிய இடத்திற்கு மாற்றப்படும் HNB Finance PLC இன் வெலிமடை கிளை

19 வருடங்களாக இலங்கையிலுள்ள வர்த்தக பெருமக்களிடம் நன்மதிப்பு மிக்க நிதிச் சேவையை வழங்கிய HNB Finance PLC வெலிமடை கிளையை இல. 44, நுவரெலிய வீதி வெலிமடை என்ற விலாசத்தில் அமைந்துள்ள சகல வசதிகள் கொண்ட கட்டடத்திற்கு அண்மையில் மாற்றியுள்ளது.

HNB Financeஇன் புதிய வெலிமடை கிளையானது HNB Financeஇன் பிராந்திய முகாமையாளர் காமினி ஆரியசிங்க மற்றும் பிரதி பிராந்திய முகாமையாளர் குஷாந்த வீரசிங்க ஆகியோரின் தலைமையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டதுடன் நாட்டில் நிலவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிமுறைகளுக்கு அமைய சுகாதார பிரிவினால் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு ஏற்றபடி HNB Financeஇன் உயர்மட்ட பிரிவினரின் பங்களிப்புடன் எளிமையான விதத்தில் கிளை திறப்பு நிகழ்வு இடம்பெற்றது.

வெலிமடை கிளை புதிய இடத்திற்கு மாற்றப்பட்டு திறக்கப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்த HNB Finance PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத், ‘விசேடமாக விவசாய மற்றும் கால்நடை தொழிலை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் நிலவும் வெலிமடை நகரில் எமது சேவைகள் இந்த பிரதேசத்திலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக முன்னரை விட அதிகமான பங்களிப்பை வழங்கும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

அத்துடன் நீண்டகாலமாக வாடிக்கையாளர் பெருமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள நம்பிக்கைப் பிணைப்புடன் மிகவும் இடவசதிகளைக் கொண்ட புதிய அலுவலக சூழல் ஒன்றுக்கு செல்வதற்கு HNB Finance புதிதாக ஆரம்பித்த தங்கக் கடன் சேவைகள் மற்றும் ஏனைய நிதி சேவைகளுடன் அனைத்து நிதி சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் எமது வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க எமக்கு சந்தர்ப்பம் உள்ளது.’ என தெரிவித்தார்.

2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE தற்போது புதிய வர்த்தகத் துறைகள் வரை விஸ்தீரமடைந்துள்ளது. சேமிப்பு, தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் மற்றும் குத்தகை சேவை போன்ற நிதி திட்டங்களுக்கு மேலதிகமாக HNB FINANCE சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME) கடன்களையும் வழங்குகிறது.

Author: Sophia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *