உலகம்

பிறந்து 20 நாட்களேயான சிசு கொரோனாவால் உயிரிழப்பு!

கொழும்பு – லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிறந்து 20 நாட்களேயான ஆண் சிசுவொன்று கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளது.

முகத்துவாரத்த பகுதியை சேர்ந்த குறித்த குழந்தை இன்று (08) அதிகாலை 4 மணியளவில் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு குழந்தை இறந்துவிட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Hot Topics

Related Articles