உலகம்

டுவிட்டரில் சாதனை படைத்த விஜய்!

உலகளாவிய ரிதியல் பிரபலங்கள் அதிகளவில் தமது தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சமூக வலைத்தளமான டுவிட்டரில் ஆண்டுதோறும் அதிக லைக்ஸ், ரீ டுவிட், அதிகம் பேசப்பட்ட வி‌ஷயம் என்ன என்பது பற்றி கணிப்பிடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த வருடம் இந்திய அளவில் அதிகளவில் ரீ டுவிட் செய்யப்பட்டு நடிகர் விஜய்யின் செல்பி சாதனைப்படைத்துள்ளது.

இந்த வருட தொடக்கத்தில் நடிகர் விஜய் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது நெய்வேலி ரசிகர்களுடன் எடுத்த செல்பியை தமது டுவிட்டரில் பகிர்ந்தார்.

இந்த செல்பி படம் தான் இந்த வருடம் டுவிட்டரில் அதிகம் ரீ டுவிட் செய்யப்பட்ட படமாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த தகவலை டுவிட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனீஷ் மகேஸ்வரி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நடிகர் விஜய்யின் செல்பி படத்தை ரசிகர்கள் மீண்டும் இணைய தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இதேபோல் இந்தாண்டு அதிகம் லைக் செய்யப்பட்ட டுவிட்டாக, அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதை அறிவித்த விராட் கோலியின் டுவிட் முதலிடத்தில் உள்ளது.

மேலும் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட டுவிட்டாக, அமிதாப் பச்சன் தனக்கு கொரோனா இருப்பதாக தெரிவித்த டுவிட் முதலிடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles