உலகம்

இலங்கையில் தொற்றாத நோய்களுக்கு உரிய சிகிச்சையை உறுதிப்படுத்தும் SLCPI

இலங்கையில் தொற்றாத நோய்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கும் SLCPI

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நாட்டில் தொற்றாத நோய்கள் (NCDs) பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகு சங்கம் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குமென இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளம் (SLCPI) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

தொற்றாத நோய்களுக்கு மருந்து வழங்கும் நடவடிக்கை குறித்து மீண்டும் கவனம் செலுத்தியுள்ள சம்மேளனம் தமது உறுப்பினர்கள் நாட்டில் அதிகரித்துள்ள நீரிழிவு நோயாளர்களின் விகிதத்தை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்றுவதற்கும் கவனம் செலுத்துமாறும் அனைத்து இலங்கையர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடதத்தக்கது.

அண்மையில் நீரிழிவு நோய் இலங்கையில் சமூக நோயாக உருவெடுத்துள்ளது. உலக வங்கியின் அறிக்கை படி (2019) ஒட்டுமொத்த இலங்கையர்களில் சுமார் 11%மானோர் நீரிழிவு நோயினால் பாதிக்ப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதுடன் உலகளாவிய ரீதியில் இந்த சுகாதார நிலையானது அதிகரித்துச் செல்வதை காணக்கூடியதாகவுள்ளது.

அதன்படி நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு தேவையான விதிமுறைகளை புரிந்து கொள்வதற்கும் மற்றும் இவ்வாறான தொற்றாத நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வசதிகளை வழங்குவதற்கு நாட்டின் சுகாதார கட்டமைப்பை மேலும் பலப்படுத்த சர்வதேச நீரிழிவு தினம் சிறந்த சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.

SLCPIஇன் தலைவரான கஸ்தூரி செல்வராஜா இந்த வருடத்தின் ஆரம்பத்தில் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் முதலாவது லொக்டவுன் காலப்பகுதியில் பெற்றுக் கொள்ளப்பட்ட அனுபவத்தை சுட்டிக்காட்டினார்.

தொற்றாத நோய் குறித்து கதைக்கும் போது நீரிழிவு என்பது குறிப்பிடத்தக்க அளவு பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அந்த நிலைமை இலங்கைக்குள் அதிகரித்துச் செல்வதையும் காணக்கூடியதாக இருப்பதாக அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையில் தொற்றாத நோய்கள் ஏற்படுவதை தடுப்பதற்கும் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கும் எமது ஒத்துழைப்புக்கள் அரசாங்கத்திற்கு அவசியமாகும்.

இலங்கை சுகாதார கட்டமைப்பிலுள்ள பிரதான பிரிவுகளாக கருதப்படும் எமது மக்கள் மத்தியில் சிறந்த சுகாதார பழக்கங்கள் மற்றும் நெறிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டில் நாளுக்கு நாள் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலை காணப்படுகின்றது. அதனால் அன்றாடம் அவர்கள் சிகிச்சை பெறுவதும் அதிகரிக்கும்.” என தெரிவித்தார்.

இந்த நீரிழிவு நோயிலுள்ள பாரதூரம் மற்றும் அது பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக ‘சுகப்படுத்துவதற்கு முன்னர் தவிர்த்துக் கொள்ளுதல்’ போன்ற முறைமைகளை பின்பற்ற வேண்டுமென அவர் விசேடமாக சுட்டிக்காட்டினார்.

தொற்றாத நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை கட்டுப்படுத்துவதற்காக நாள்தோறும் உடற்பயிற்சி மற்றும் போஷாக்கு நிறைந்த உணவுப் பழக்கம் (உதாரணம்: கலோரி அளவு குறைந்த உணவு) போன்ற ஆரோக்கியமான வாழ்க்கையை பின்பற்றுவதை சர்வதேச நீரிழிவு சங்கம் பரிந்துரை செய்கிறது.

இவ்வாறான வாழ்க்கை முறையை பின்பற்றும் தனி நபர்கள் உலகளாவிய ரீதியில் பதிவாகும் நீரிழிவு நோய்களில் இருந்து 90% வீதம் வரை உள்ள இரண்டாம் நிலை நீரிழிவு (Type 2 Diabetes) நோய் ஏற்படும் அபாயத்திலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விசேடமாக இவ்வாறான கொவிட் தொற்றுநோய்க்கு ஈடுகொடுக்கக் கூடிய சுகாதார கட்டமைப்பை இடையூறுகளும் இன்றி மருந்துகளை விநியோகிக்கும் முறையொன்றுடன் இணைந்து சுகாதார மேம்பாடு மற்றும் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக SLCPI உறுப்பினர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

கொவிட்-19 காரணமாக பொருட்கள் விநியோத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஏற்பட்டள்ள இடையூறுகளுக்கு மத்தியில் மருந்து விநியோக வலைப்பின்னல் எவ்வித தடைகளும் இன்றி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக SLCPI உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதன்படி திட்டமிடப்பட்ட வலைப்பின்னல் நடவடிக்கையில் தொற்றாத நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும் மற்றும் நோயைக் கட்டுப்படுத்துவதற்காகவும் ஒத்துழைப்புக்களை வழங்கும் வகையில் வியூகங்கள் வகுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நீரிழிவு மற்றும் தொற்றாத நோயாளர்களின் அத்தியாவசிய மருந்துகளை அவர்களது வீட்டிற்கே கொண்டுவந்துகொள்வதற்கு தேவையான விதத்தில் Online Pharmacies மற்றும் வீடுகளுக்கு விநியோகித்தல் போன்ற முறைமைகள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதற்கு முன்னர் இருந்து இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நபர்கள் கொவிட்-19 தொற்றால் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென புரிந்துகொள்ளப்பட்டுள்ளதுடன் இந்த மருந்து விநியோக வசதிகள் மூலம் இந்த அவதானத்தைக் குறைந்துகொள்ள முடியும்.

மீண்டும் கொவிட்-19 தொற்று அதிகரித்துச் செல்வதுடன் SLCPI மற்றும் அதன் உறுப்பினர்கள் நீரிழிவு நோய் குறித்து எவ்வித இடையூறுகளும் இல்லாமல் மருந்து விநியோத்தை உறுதிப்படுத்துவதற்காக அவர்களது அர்ப்பணிப்பு குறித்து கவனம் செலுத்தியுள்ளனர்.

“சம்மேளனம் மற்றும் அதன் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக விநியோக சங்கிலி நடவடிக்கையின் போது தொற்றாத நோய்களுக்காக முக்கியத்துவம் அளித்து செயற்படுகிறார்கள். இலங்கையில் நீரிழிவு நோய்க்கு உரிய நேரத்தில் சிகிச்சைப் பெற்றுக் கொள்வதை உறுதி செய்துகொள்வது மிகவும் முக்கியமானது.” என கஸ்தூரி செல்வராஜா தெரிவித்துள்ளார்.

Hot Topics

Related Articles