உலகம்

இலங்கையின் விசாலமான காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் இன்று திறந்து வைப்பு!

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் விசாலமான காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் நடுகுடாவில் இந்த மின்னுற்பத்தி மையம் அமைந்துள்ளது.

மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, ராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் 10.30க்கு இடம்பெறும் இந்த நிகழ்வில், பிரதமர் மகிந்த ராஜபக்ஸ கலந்துக் கொள்கிறார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி வழங்கலில், 141 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்த காற்றாலை மின்னுற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் 100 மெகாவாட் திறன் கொண்ட மின் சக்தி தேசிய மின் கட்டத்திற்கு வெளியிடப்படும் என்று இராஜாங்க அமைச்சர் துமிந்தா திசானநாயக்க தெரிவித்துள்ளார்.

33 காற்றாலை கோபுரங்களைக் கொண்ட இந்த மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க 10 ரூபாய்க்கும் குறைவாக செலவாகும் என்று கூறப்படுகிறது.

நாட்டில் காற்றாலை மின் நிலையங்கள் இருந்தாலும், அவை தனியார் துறைக்கு சொந்தமானவை, இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான முதல் காற்றாலை மின் நிலையம் இதுவாகும்.

Hot Topics

Related Articles