உலகம்

இன்ஸ்டாவில் அதிகமான பாலோவர்ஸ் இருந்தால் மாலைதீவில் அனைத்தும் இலவசம்!

மாலத்தீவில் உள்ள சுற்றுலா தலங்களை உலகம் முழுவதும் பிரபலப்படுத்துவதற்காக ஒரு சலுகை அளிக்கப்பட்டு வருகிறதாம்.

அதன்படி இன்ஸ்டாகிராமில் 20 லட்சத்துக்கு அதிகமானவர்கள் பின்தொடரும் பிரபலங்கள், மாலத்தீவுக்கு வருகை தந்தால், அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாம்.

அதுவே 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின்தொடரும் பிரபலங்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் இரண்டு விமான டிக்கெட் இலவசமாக வழங்கப்படுமாம்.

ஒரு கோடிக்கு அதிகமானவர்கள் பின்தொடரும் பிரபலங்களுக்கு போகவர விமான டிக்கெட் மற்றும் உணவு, தங்குமிடம் என அனைத்துமே இலவசமாம்.

எதற்கும் பணம் செலுத்த தேவையில்லையாம்.
இந்நிலையில், தேன்நிலவுக்காக மாலைத்தீவு சென்றிருந்த நடிகை காஜல் அகர்வால், அங்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

காஜல் அகர்வாலுக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு கோடிக்கும் அதிகமான பாலோவர்கள் இருப்பதால், அவர் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் ஹனிமூனை முடித்து கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

காஜல் அகர்வால் மட்டுமின்றி நடிகைகள் சமந்தா, பிரனிதா, வேதிகா, ரகுல் பிரித் சிங் உள்பட பல நடிகைகள் இந்த சலுகையின் அடிப்படையில் தான் மாலத்தீவு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த சலுகையை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நிபந்தனையும் விதிக்கப்படுகிறதாம்.

அது என்னவெனில், மாலத்தீவில் தாங்கள் விதவிதமாக புகைப்படம் எடுத்து தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய வேண்டும் என்பது தான்.

அதேபோன்று மாலத்தீவு சென்ற நடிகைகள் அனைவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டிருந்தனர்.

இதன் காரணமாக மாலத்தீவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம்.

Hot Topics

Related Articles