உலகம்

2 குழந்தைகளை கொன்று கணவன் – மனைவி தற்கொலை – சேலத்தில் சோகம்!

தமது இரண்டு குழந்தைகளை கொன்று கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பொன்னம்மாபேட்டை அருகே உள்ள வாய்க்கால் பட்டறை, வால்காடு பகுதியில் வசித்து வந்த கணவன் (வயது 38), மனைவி (32), இவர்களது 12 மற்றும் 09 வயது மகன்கள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

புற்று நோயால் இறந்த தமது மூத்த மகனின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாமல் இவ்வாறு இவர்கள் விஷம் உட்கொண்டு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த தம்பதியின் மூத்த மகன் வயது 18 கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த துக்கம் அவர்களின் உறவினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து காலை 10.30 மணிக்கு உறவினர் அங்கு வந்து வீட்டின் கதவை திறந்து பார்த்த போது வீட்டுக்குள் 4 பேரும் வி‌ஷம் குடித்து இறந்து கிடந்துள்ளனர்.

இது குறித்து அம்மாப்பேட்டை போலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் உடல்களை மீட்டுள்ளதுடன் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

இதில், மகன் தங்களை விட்டு சென்று விட்டான். இனிமேல் உயிரோடு இருப்பதை விட சாவதே மேல் என கணவன், மனைவி இருவரும் முடிவெடுத்துள்ளதையடுத்து இருவரும் முதலில் தமது மகன்களுக்கு வி‌ஷத்தை கொடுத்து விட்டு தாங்களும் வி‌ஷத்தை உட்கொண்டுள்ளனர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Hot Topics

Related Articles