உலகம்

11 நாட்களுக்கு பின்னர் அரேபிய கடலில் மீட்கப்பட்ட இந்திய விமானியின் உடல்!

காணாமல் போன மிக் -29 விமானி நிஷாந்த் சிங் என்பவரின் உடல் அரேபிய கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இருப்பினும், இது சிங்கின் உடல் என்பதை உறுதிப்படுத்த டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்திய கடற்படையின் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் -29 கே பைலட் கமாண்டர் நிஷாந்த் சிங்கின் ஜெட் விமானம் நவம்பர் 27 அன்று கடலில் விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளாகி விழுந்து 11 நாட்களுக்கு பின்னர் அவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles