உலகம்

மொரட்டுவை விபத்து : கர்ப்பிணிப் பெண் ஆபத்தான நிலையில்!

இலங்கையின் மொரட்டுவை எகொட உயன பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (04) ஏற்பட்ட வீதி விபத்தில் காயமடைந்த கர்ப்பிணிப் பெண் கருச்சிதைவு ஏற்பட்டுள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாதசாரி கடவையில் பாதையை கடக்க முற்பட்ட போது வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரால் கர்ப்பிணிப் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் விபத்துக்குள்ளாக்கப்பட்டனர்.

இதனையடுத்து குறித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடும் இளைஞர் என்பதுடன் இதற்கு முன்பும் பொலிஸாரினால் கண்டிக்கப்பட்டு உள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, நேற்றிரவு இலங்கையில் பைக்குகள் தொடர்பான மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் விதிகளை மீறியதன் காரணமாக சட்டபூர்வமான திறனிலும் அதிக சக்தி வாய்ந்த 23 பந்தய மோட்டார் சைக்கிள்களையும் அதில் பயணித்த 40 இளம் ஓட்டுனர்களையும் மிரிஹானா போலீஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த குழு மதிவெல வீதியில் மோட்டர் சைக்கில் பந்தயத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக மிரிஹானா போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரு பெண் பிள்ளைகள் பரிதாபமாக பலி ! கர்ப்பிணித் தாய் படுகாயம் – வீதியைக் கடக்கும் போது விபரீதம் !

Hot Topics

Related Articles