பிரச்சினைகளுக்கு பஞ்சமே இல்லாத 2020 ஆம் ஆண்டில் மற்றொரு புதிராக உலகை வலம் வந்துகொண்டிருக்கும் விடயம் தான் உலோக தூண்கள்.
கொரோனாவுக்கு அடுத்தபடியாக உலகின் பல பாகங்களிலும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உலோக தூண்கள் மர்மமான முறையில் செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்டிருப்பதும் பின்பு அவை தானாக மறைந்து விடுவதும் 2020 ஆண்டின் இறுதி பகுதியில் இருக்கும் எம்மை மேலும் பதற்றம் அடைய செய்ததுள்ளது எனலாம்.
மர்மமான முறையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த உலோக தூண் கடந்த மாதம் 18 ஆம் திகதி அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்தில் முதல் தடவையாக கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த பாலைவன பகுதியில் வனத்துறை அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்துகொண்டிருந்த போது பாலைவன பகுதியின் மையத்தில் பளபளப்பான வெளிச்சத்தில் ஒரு உலோகத்தூண் நிறுவப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்த தூணை யார் நிறுவியது, எப்படி இந்த தூண் இங்கு கொண்டுவரப்பட்டது என எந்த விவரமும் அதிகாரிகளுக்கு தெரியாமல் இருந்தது. அந்த தூண் கண்டுபிடிக்கப்பட்ட சில நாட்களில் மர்மமான முறையில் மாயமானது.
அந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் பரவத்தொடங்கியது. இதனையடுத்து தற்போத வரை அதுபோன்ற 06 தூண்கள் உலகின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நேற்று மர்ம தூண் கொலம்பியா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற மர்ம தூண்கள் அனைத்தும் வெள்ளி நிறத்தில் இருந்த நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தூண் தங்க நிறத்தில் உள்ளது.
எனினும் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்படும் இந்த மர்ம தூண்கள் ஏதேனும் குழுக்களால் மக்களை பயமடைய செய்யும் நோக்கத்தோடு திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறதா என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பி.பி.சி வானொளி சேவையின் டி.ஜே வாக விளங்கிய பிரபல கலைஞர் ரோப் டா பேங்க் இந்த பலபலப்பான தூணுக்கு அருகில் இருந்து புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் ஏனையவர்கள் சொல்வது போன்று இது ஏலியன்களின் நிறுவப்படவில்லை எனவும், இது யாரவது ஒரு விளம்பரத்திற்காக செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
Just another Monday with the Isle of Wight trending… nope I’m not sure if it’s aliens, a Coldplay pr stunt or a local mirror dealer drumming up trade but it got us all down the beach anyway #monolith #monday #compton #IsleofWight pic.twitter.com/eIscRRRu2B
— Rob da Bank (@RobdaBank) December 7, 2020
இதுவரை மர்ம தூண்கள் தோன்றிய இடங்கள்-
* நவம்பர் 18 – அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்தில் மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்டது.
* ருமேனியா நாட்டின் பட்ஹா டொம்னி மலைப்பகுதியில் 2-வது மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்டது.
* அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பைன் மலைத்தொடர் பகுதியில் 3-வது மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்டது.
* இங்கிலாந்து நாட்டில் உள்ள ஐஸ்லி ஆப் வெயிட் என்ற தீவில் உள்ள கடற்கரையில் முக்கோண வடிவிலான 4-வது மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்டது.
* நெதர்லாந்து நாட்டில் உள்ள அவுண்ட் ஹார்ன் என்ற நகரில் உள்ள காட்டுப்பகுதியில் 5-வது மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த தூணை நாங்கள் தான் நிறுவினோம் என அமெரிக்காவை சேர்ந்த ‘தி மோஸ்ட் பேமஸ் ஆர்ட்’ என்ற அமைப்பு பொறுப்பெற்றுள்ளது.
* இந்நிலையில், 6-வது மர்ம தூண் கொலம்பியா நாட்டில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற மர்ம தூண்கள் அனைத்தும் வெள்ளி நிறத்தில் இருந்த நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தூண் தங்க நிறத்தில் உள்ளது.
இந்நிலையில், இந்த மர்ம தூண்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் மக்கள் இந்த தூண்களையும் ஏலியன் வருகையையும் ஒப்பிட்டு பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.