உலகம்

மகாதீபத்தை தரிசனம் செய்த நடிகையால் பரபரப்பு!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் மகா தீபத்தை, மலை உச்சிக்கு சென்று தரிசிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இத் தடைகளை மீறி மலை உச்சிக்கு சென்று மகாதீபத்தை தரிசனம் செய்த நடிகையின் செயல் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மலை உச்சியில் ஏற்றப்பட்டு உள்ள மகா தீபத்தை, சூது கவ்வும் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகை சஞ்சிதா ஷெட்டி மலை ஏறி சென்று தரிசனம் செய்து உள்ளார்.

அங்கு அவர் மகா தீபத்தை அருகில் நின்று தரிசிப்பதை புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sanchita Shetty (@isanchitaa)

 

அதில் அவர்,

திருவண்ணாமலை மலையேறியது உண்மையிலேயே அதிசயம். மலையின் உச்சியை அடைய 1 மணி 40 நிமிடங்களானது.

ஆங்காங்கே ஓய்வெடுத்து கீழே இறங்க 2 மணி நேரம் 30 நிமிடங்களானது என்று பதிவிட்டு உள்ளார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 29 ஆம் திகதி 2.668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்பட்டது. இந்த மகா தீபம் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை காட்சி அளிக்கும்.

மலையில் முக்கிய வழிபாட்டுதலங்களில் வனத்துறையினர் மற்றும் போலிஸாரின் தொடர் கண்காணிப்பில் உள்ள இந்தப் பகுதியில் பக்தர்கள் மலை மீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் நடிகை சஞ்சிதா ஷெட்டி மலை ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்ததையடுத்து அவர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளனர்.

Hot Topics

Related Articles