உலகம்

ஜனாதிபதி அலுவலகம் முன் சஜித் தலைமையில் எதிர்ப்பு போரட்டம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சத்தியினால் அரசாங்கத்துக்கு எதிராக பந்தமேந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

ஏற்பாடு செய்யப்பட்ட “அமைதியான போராட்டம்” இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நடைபெற்றது.

மஹர சிறைச்சாலைகளுக்குள் நடந்த சம்பவங்கள் இந்த போராட்டத்தின் முக்கிய காரணி எனவும் இது அரசாங்கத்தின் ‘ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு’ எதிரானது போரட்டம் எனவும் ஐக்கிய மக்கள் சத்தி தெரிவித்துள்ளது.

 

இந்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சத்தியின் பிரதிநிதித்துவப்படுத்தும் பொது பிரதிநிதிகள் அரசாங்கத்துக்கு எதிராக பந்தமேந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சத்தி தொடர்ந்து போராடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

Hot Topics

Related Articles