உலகம்

சாதாரண தரப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை 2021 மார்ச் மாதம் 01 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (01) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பீரிஸ் சாதாரண தரப் பரீட்சை ஏற்கனவே திட்டமிட்டபடி 2021 ஜனவரி 18-27 வரை நடத்தப்படாது என்று தெரிவித்தார்.

இதேவேளை, சமீபத்தில் நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகள் 2021 மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தேர்வு ஆணையர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு 621,000 மாணவர்கள் தகுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles