உலகம்

கொரோனா பாதுகாப்பு உடையுடன் திருமணம் முடித்த ஜோடி -ராஜஸ்தானில் விநோதம்

திருமணம் என்றாலே அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பது திருமண ஆடைகள் மற்றும் அலங்காரங்கள் தான்.

உலகநாடுகளில் கொரோனா காரணமாக எழுந்துள்ள கட்டுபாடுகள் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ள போதிலும் பலர் தாம் நினைத்த படி திருமணங்களை நடத்தாமலும் இல்லை.

அந்தவகையில், ராஜஸ்தானில் ஷாபாத் நகரில் பரா பகுதியில் ஜோடி ஒன்று தாம் நினைத்தபடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததுள்ளது.

எனினும் திருமணத்திற்கு முன், திருமணஜோடிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் மணமகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. எனினும், திருமணம் செய்து கொள்வதில் இருவரும் உறுதியாக இருந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மணமக்கள் இருவரும் கொரோனா தடுப்புக்கான தனிநபர் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டனர். பின்பு இருவரும் சடங்குகளை முறையாக பின்பற்றி திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த நபரும் தனிநபர் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டார்.

மணமகன் பாரம்பரிய தலைப்பாகை மற்றும் கையுறைகளை அணிந்து கொண்டார். இதேபோன்று மணமகளும், முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்தபடி காணப்பட்டார்.

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடியின் திருமண வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது.

Hot Topics

Related Articles