உலகம்

உலகின் தனிமையான இலங்கை யானை! புதிய நண்பர்களை சந்தித்த தருணம்

உலகின் தனிமையான யானை’ காவன், கம்போடியாவில் உள்ள ஒரு சரணாலயத்தில் தனது முதல் நாளிலேயே சில நண்பர்களுடன் நெருக்கமாக பலகிவருகின்றது.

இலங்கையினால் பாகிஸ்தானுக்கு பரிசாக வழங்கப்பட்ட ஆசிய யானை 1985 முதல் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் பாழடைந்த மிருகக்காட்சிசாலையில் தனது நாட்களைக் கழித்திருக்கிறது.

36 வயதான காவன் அதன் தோழர்கள் 2012 இல் இறந்த பிறகு சுமார் 08 ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளது.

சழுக ஆர்வளர்கள் மற்றும் விலங்கு நலக் குழுக்களிள் செயற்பாட்டால் இவ் யானை நிலை வெளிச்சத்துக்கது வந்தது. அதனையடுத்து குறித்த யானையை இடமாற்றம் செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் இறுதியாக மே மாதம் ஒப்புதல் அளித்திருந்தது.

இந்நிலையில் கம்போடியாவுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஒரு பெரிய யானையை விமானத்தில் கொண்டு செல்வது இதுவரை ஒரு சில முறை மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது காவனின் அதிஸ்டத்தினால் நிகழ்ந்துள்ளது.

இவ் விமான பயணத்தில் கவான் “அடிக்கடி பறப்பவர் போல” நடந்து கொண்டார் என் அதன் பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 30, 2020 அன்று கம்போடியாவுக்கு கொண்டுவரப்பட்ட காவன் ஆசிய யானை பிக்குகளினால் அடங்கிய ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.

ஒடார் மீன்ச்சி மாகாணத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் பாகிஸ்தானில் சங்கிலிகளினால் கட்டி வைக்கப்பட்ட யானை 35 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்படுள்ளது.

ஏற்கனவே மூன்று பெண் யானைகளை பராமரிக்கும் குறித்த சரணாலயத்தில் காவன் பராமரிக்கப்பட்டுவருகின்றது.

காவன் இனி தனிமையாக இருக்க மாட்டான் என்று நம்புகிறேன். “உள்ளூர் யானைகளுடன் காவனை வளர்ப்போம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் – இது மரபணு மடிப்பைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சி” என்று கம்போடியாவின் துணை சுற்றுச்சூழல் அமைச்சர் நேத் பீக்ட்ரா கூறியுள்ளார்.

இந்நிலையில், காவன், கம்போடியா சரணாலயத்தில் உள்ள சில நண்பர்களுடன் நெருக்கமாக பலகிவரும் காணொளி பகிரப்பட்டு வைரலாகிவருகின்றது.

Hot Topics

Related Articles