உலகம்

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுமிகள் – பாதுகாப்பு படையினர் செய்த காரியம்!

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் நேற்று காலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த 2 சிறுமிகள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

இதையடுத்து, எச்சரிக்கையுடன் செயல்பட்ட எல்லைப்பாதுகாப்பு படையினர் எந்தவித தாக்குதலும் நடத்தாமல் அந்த 2 சிறுமிகளையும் பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

சிறுமிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அப்பாஸ்பூர் கிராமத்தை சேர்ந்த லைபா சபீர் (17), சனா சபீர் (13) எனவும் அவர்கள் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்ததுள்ளமையும் தெரியவந்ததுள்ளது.

இதையடுத்து, அந்த இரண்டு சிறுமிகளுக்கும் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்த இந்திய படையினர் சிறுமிகளை பாகிஸ்தான் தரப்பிடம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர்.

இந்நிலையில், இந்திய எல்லைக்குள் தவறுதலாக வந்த குறித்த இரண்டு சிறுமிகளையும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷங்கன் டா பாக் பகுதியில் உள்ள இருநாட்டு எல்லைக்கட்டுப்பாடு பகுதி வழியாக இந்திய பாதுகாப்பு படையினர் இன்று பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

Hot Topics

Related Articles