உலகம்

200 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நியூட்டனின் வெளியிடப்படாத குறிப்புகள் விற்பனைக்கு!

சார், ஐசக் நியூட்டனால் 1680 களில் எழுதப்பட்டதாகக் கருதப்பட்டும் வெளியிடப்படாத குறிப்புகள் ஏலத்தில் விடப்பட உள்ளன.

ஐசக் நியூட்டன் தனது ஈர்ப்பு கோட்பாட்டை நிரூபிக்கும் போது எகிப்தில் உள்ள பிரமிடுகளின் ரகசியங்களை வெளிக்கொணர முயற்சித்ததாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அவரின் வெளியிடப்படாத இவ் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

நியூட்டனின் மரணத்திற்கு 200 ஆண்டுகளுக்குப் பிறகு ஓரளவு எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டவை, இப்போது சோதேபிஸால் ஏலத்தில் விடப்பட உள்ளது.

இவ் குறிப்புகள் அவரது நாய் டயமண்ட் ஒரு மேஜையில் குதித்து மெழுகுவர்த்தியை விழுத்தியதன் காரைணமாக ஏரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

 

அவை நூறாயிரக்கணக்கான பவுண்டுகளுக்குச் ஏலத்தில் விற்பனையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஏலம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நிறைவடைகிறது.

17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐசக் நியூட்டன், லிங்கன்ஷையரில் உள்ள வூல்ஸ்டார்ப் மேனரில் இருந்தபோது பிரமிடுகளைப் படித்த நியூட்டன், பிரமிடுகள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன என்பதைக் கண்டுபிடிப்பது உலகத்தைப் பற்றிய பிற இரகசியங்களுக்கு விடையாக அமையும் என நம்பினார்.

பிரமிடுகளை உருவாக்கும் போது பண்டைய எகிப்தியர்கள் பயன்படுத்திய அளவீட்டு அலகுக்கு குறித்து அறிய அவர் தீவிரமாக முயன்றுள்ளமை இவ் குறிப்புகளில் இருந்து தெரியவருவதாக அறிவியளாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

ஆவணங்கள் ஒரு தனியார் சேகரிப்பாளரிடம் ஏலத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் நூலகங்களும் ஏலம் எடுக்கும் வாய்ப்புகள் உள்ளது.

Hot Topics

Related Articles