தனக்கு பிறந்த பெண் குழந்தையை வளர்க்க மனைவியின் குடும்பத்தாரிடம் மாதம் ரூபா 30 ஆயிரம் கேட்ட நபர் மீது இந்திய போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் தானே மாவட்டம் பிவண்டி, பகுதியில் பெண் குழந்தையை 21 வயது பெண்ணை அவரின் கணவர் உட்பட குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
மேலும் அவர்கள் பெண்ணிடம் குழந்தையை வளர்க்க, அவரது பெற்றோரிடம் இருந்து மாதம் ரூ.30 ஆயிரம் வாங்கி தருமாறு வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், பலிஸில் முறைப்பாடு செய்யதுள்ளார்.
இந்நிலையில் விசாரணையை மேற்கொண்டுள்ள பொலிஸார் குறித்த பெண்ணின் கணவர் மற்றும் அவரின் பொற்றோர் மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.