உலகம்

பிரான்சில் தொடரும் மக்கள் போராட்டம்!

பிரான்ஸில் புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக அந்நாட்டு மக்கள் முக்கிய நகரங்களில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய பாதுகாப்புச் சட்டத்தின் 24 வது பிரிவின் படி, பொலிஸ் அல்லது பாலினங்களை அடையாளம் காணும் புகைப்படங்கள் அல்லது காணொளிகளை உளவியல் அல்லது உடல் ரீதியான தீங்கு விளைவிக்கும் “நோக்கத்துடன்” வெளியிடுவது தண்டனைக்குரியது, என அறிவிக்கும் வகையில் இவ் புதிய பாதுகாப்பு சட்டம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படும் என அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டி குறித்த போரட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் கார் மற்றும் தடுப்புகளை கொளுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். வாகனங்களுக்கு தீ வைத்ததுடன், கடை ஜன்னல்களை அடித்து நொறுக்கி, கற்களையும் பொலிஸாரை நோக்கி வீசினர், பொலிஸார் தண்ணீர் மற்றும் கண்ணீர் புகை மூலம் ஆர்ப்பபாட்ட காரர்களுக்கு பதிலளித்தனர்.

 

அத்துடன் பிரான்ஸின் இவ் புதிய பாதுகாப்புச் சட்டம் மனித உரிமைகளுடன் பொருந்தாது என்று ஐ.நா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Hot Topics

Related Articles