சட்டவிரோதமான முறையில் விற்பனைக்கு தயாராக இருந்த 1070 முத்துக்களுடன் மூன்று சந்தேகநபர்களை அம்பலங்கொடை போலிஸின் சிறப்பு பணிக்குழு கைது செய்துள்ளது.
இன்று (06) ஹம்பாந்தோட்டை கடற்படைத் தளத்தின் உளவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின்படி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து கைபற்றப்பட்ட முத்துக்களின் பெறுமதி 86 லட்சத்திற்கும் அதிகம் எனவும் முத்துக்களின் மொத்த நிறை சுமார் 650 கிலோகிராம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட முத்துக்கள் ஹம்பாந்தோட்டை மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.