உலகம்

இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்!

இலங்கையின் கொழும்பில் மேலும் சில பிரதேசங்கள் நாளை முதல் தனிமைப்படுத்தப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹுனுபிட்டி கிராம சேவகர் பிரிவு, குருந்துவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 60 ஆம் வத்தை மற்றும் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோகிலா வீதி ஆகியவை நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பொலிஸ் பிரிவின் கெரவலப்பிட்டி, ஹேக்கித்தை, குருந்துஹேன, எவரிவத்தை மற்றும் வெலிக்கடை முல்ல ஆகிய பகுதிகள் நாளை அதிகாலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன் பேலியகொடை பொலிஸ் பிரிவின் பேலியகொடை வத்த, பேலியகொடை – கங்கபட, மீகஹவத்த மற்றும் பட்டிய வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

இதுதவிர, கிரிபத்கொடை காவற்துறை அதிகார பகுதியின் வெலேகொட வடக்கு கிராம சேவகர் பிரிவும் நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது.

இதே வேளை, வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவு மற்றும் புளூமெண்டால் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயபுர கிராம சேவகர் பிரிவு ஆகியன திங்கள் (07) காலை 05:00 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் தொடரும் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.

Hot Topics

Related Articles