உலகம்

கண்டியில் வனப்பகுதியில் குரங்குகள் மரணம் : வெளியானது பி.சி.ஆர் முடிவுகள்

உடவத்தகலை வனப்பகுதியில் சமீபத்தில் பல குரங்குகள் இறப்பிற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

இவ் குரங்குகள் கொரோனா தொற்று காரணமாக இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த குரங்கு ஒன்றுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் அதற்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் இவ் குரங்குகளின் இறப்பு விஷத்தால் ஏற்பட்டதாக நம்பப்படுகின்றது.

பேராதெனிய பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீட நோயியல் நிபுணர் கவிந்த விஜேசுந்தர குரங்குகள் விஷம் காரணமாக இறந்துவிட்டதாகவும், அவை COVID க்கு எதிர்மறையாக சோதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Hot Topics

Related Articles