சுமார் 300 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் தம்வசம்வைத்திருந்த 04 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாரவில தொடுவெவ பகுதியை சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபர்கள் இன்று (06) காலை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 100 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 100 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.