உலகம்

ஆண்களுக்கு அந்தரங்க பிரச்சினைகளை ஏற்படுத்தும் கொரோனா தொற்று! எச்சரிக்கும் மருத்துவர்கள்

கொரோனா தொற்றுக்கள்ளாகி குணமடைந்தவர்களுக்கு நீண்டகால பக்க விளைவுகள் ஏற்படுவது குறித்து மருத்துவர்கள் தொடர்ந்தும் எச்சரித்துவருகின்றனர்.

இந் நிலையில் தற்போது கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஆண்களிடையே விறைப்புத்தன்மையின் நீண்டகால பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் இரத்தக் குழாயில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது.

இதன் காரணமாக இந்த நோயிலிருந்து குணமடைந்த பிறகும் படுக்கையறையில் ஆணின் செயல் திறனை பாதிக்கக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளதாக நிபுணர்கள் கவலை வெளியிட்டள்ளனர்.

COVID-19 தொற்றிலிருந்து பெரும்பான்மையான மக்கள் குணமடைந்த போதிலும் நரம்பியல் சிக்கல்கள் உட்பட காலப்போக்கில் ‘தொற்றுநோய்களின் நீண்டகால திர்மறையான விளைவுகளை’ அவர்கள் எதிர்கொள்ளநேரிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Hot Topics

Related Articles