உலகம்

8.8 பில்லியன் ரூபாவை வரிக்கு பின்னரான இலாபமாக பதிவுசெய்துள்ள HNB

HNB ஆரம்ப 9 மாதங்களுக்காக 7.7 வரிக்கு பின்னரான இலாபமாக (PAT) அறிக்கை செய்துள்ளதுடன் அந்த காலப்பகுதியில் HNB குழுமம் 8.8 பில்லியன் ரூபாவை வரிக்கு பின்னரான இலாபமாக அறிக்கை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2020இன் முதல் 9 மாதங்களுக்காக பெற்றுக் கொண்ட நிதி செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த HNBஇன் தலைவர் தினேஷ் வீரக்கொடி, ‘கொவிட்;-19 தொற்றுநோயின் முதல் அலை இலங்கையில் மிகவும் வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

என்றபோதிலும் உலகளாவிய ரீதியில் தொற்றுநோய் படிப்படியாக அதிகரித்ததன் விளைவாக தற்போது நம் தேசம் என்ற வகையில் மீண்டுமொருமுறை தீர்மானம் மிக்க ஒரு கட்டத்திற்கு வந்துள்ளோம்.

(HNBஇன் தலைவர் தினேஷ் வீரக்கொடி)

 

தொற்றுநோயினால் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சவால்களுக்கு மத்தியிலும் HNB தமது நிதிப் பலத்தின் நிலையான தன்மை மற்றும் சமாளிக்கக் கூடிய தன்மையைக் காட்டியது.

அண்மையில் முடிஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் சேர்விஸ் நிறுவனத்தினால் முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கையின் இறையாண்மை தரப்படுத்தலில் இரு இடங்களால் வீழ்ச்சியடைந்தமையினால் நாடு பின்னடைவை சந்தித்தது.

இந்த பின்னடைவின்போது நாட்டிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோருக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக பிரான்ஸ் அபிவிருத்தி நிதி நிறுவனமான PROPARCO உடன் 60 மில்லியன் அமெரிக்கன் டொலர் நீண்டகால கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட HNB க்கு முடிந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.’ என தெரிவித்தார்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நிதி நிலைமைகள் குறித்து இலேசான கொள்கையொன்றை பின்பற்றுவதை அடிப்படையான 400 லட்சம் சராகரி எடையுள்ள அத்தியாவசிய கடன் விகிதம் (AWPLR) வீழ்ச்சியடைந்தது.

2019ஆம் ஆண்டின் இதே காலப்பகுதிக்கு சமாந்திரமாக வட்டி விகிதம் 8.7% ஆல் குறைவடைந்து வங்கியின் வட்டி வருமானம் 79.6 பில்லியன் ரூபாவால் வீழ்ச்சியடைந்தது. கடந்த வருடத்திற்கு சமாந்திரமாக வட்டி செலவீனம் 7.3% ஆல் குறைந்து 45.8 பில்லியன் ரூபாவாக பதிவானது. அதன் விளைவாக தேறிய வட்டி வருமானம் (NII) கடந்த வருடம் முதல் 9 மாதங்களுக்கு சமாந்திரமாக 10.6% ஆல் குறைந்து 33.8 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 தொற்றுநோயின் தொடர்ச்சியான அழுத்தங்கள் இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், வெளிநாட்டு கார்ட் கொடுக்கல் வாங்கல் அளவு குறைவடைந்தமை, இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்த கொவிட் நிவாரண யோசனை முறைமையின் ஒரு அங்கமாக பல்வேறு கட்டண குறைப்பு மற்றும் பொருளாதாரம் தொடர்பில் கீழ் மட்டத்திலுள்ளவர்களின் நடவடிக்கை போன்றவற்றின் விளைவாக தேறிய கட்டணம் மற்றும் தரகுப்பண (Commission) வருமானம் கடந்த வருடத்திற்கு சமாந்திரமாக 18.9% ஆல் குறைவடைந்து 5.4 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தது.

என்றபோதிலும், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி மற்றும் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு டிஜிட்டல ஊடகங்களுக்கு மாறியமை காரணமாக டிஜிட்டல் வங்கி சேவைகள் மற்றும் தளங்களினால் பெற்ற வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை வங்கி வெளிக்காட்டியுள்ளது.

HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ் கருத்து தெரிவிக்கையில், ‘கொவிட்;-19இன் இரண்டாவது அலை ஆரம்பிப்பதற்கு முன்னர் கடந்த சில மாதங்களில் சிறந்த பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது.

என்றபோதிலும், இது உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள பொதுவான நிலைமையாகவே கருதப்படுகிறது. அதனால் நாட்டில் கீழ் மட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ‘புதிய பொது நிலைமைக்கு வடிவமைப்பதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவது முக்கியமாகும்.

அதன்படி, வங்கி செப்டெம்பர் மாதம் ஆகும் போது கொவிட்-19 தொற்றுநோயினால் அழுத்தங்களுக்கு உள்ளான தனிநபர்கள் மற்றும் தொழில்முனைவோர் 85,000க்கும் அதிகமானவர்களுக்கு கடன் தாமத நிவாரணம் வழங்குவதற்கு மேலதிகமாக, இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து சௌபாக்கியா கடன் யோசனை முறையின் கீழ் 24 பில்லியன் ரூபா பணி மூலதன கடன் வசதிகள் வழங்கப்பட்டன.

கடந்த இரு வருடங்களாக எதிர்கொண்ட பேராபத்தான நிலைமையினால் இடையூறுகளை எதிர்கொண்ட பிரிவுகளுக்கு தேவையான நிதி ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொடுக்க நாட்டிலுள்ள வங்கித்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி எமது பொருளாதாரத்தில் மிகவும் கவனம் செலுத்தப்பட்ட பிரிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு குறித்த அதிகாரிகள் நிலையான, நீண்டகால தீர்வுகள் மற்றும் மிகவும் நிலையான தீர்வு நிதி முறைமைகளை அறிமுகம் செய்துள்ளதாக நாம் நம்புகிறோம்.’ என தெரிவித்தார்.

(HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ்)

 

கொவிடின் தாக்கத்தை நிர்வகிப்பது, வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகத்திற்கான உதவிகளை உள்ளடக்குதல் தொடர்பாக HNBஇன் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகயைில் டிஜிட்டல் தளங்கள் மூலம் பரிமாற்றங்களை இயக்குதல்; இடர்களை நிர்வகித்தல், டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப தளங்களை மேம்படுத்துதல் போன்றவற்றில் தீவிரம் காட்டியமை போன்றவற்றிற்கு ஆசிய வங்கியாளர் 2020ஆம் ஆண்ற்கான விருதுவழங்கும் நிகழ்வில் HNBஐ ‘கொவிட்-19இன் போது இலங்கையில் சிறந்த நிர்வகிக்கப்பட்ட வங்கி’ என அண்மையில் அறிவித்தது.

மேலும் கருத்து தெரிவித்த ஜொனதன் அலஸ், “தொற்றுநோய்க்கு மத்தியில் எமது நம்பிக்கையான வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான சேவையை உறுதி செய்வதற்காக பல தடைகளை துணிவுடன் தாண்டிய HNBஇன் நிர்வாகத்திற்கும் பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், எமது மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த சோதனை நிறைந்த காலங்களில் எம்மீது நம்பிக்கை வைத்திருந்த முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டின் முற்பகுதியில், ‘த பேங்கர்’ சஞ்சிகையினால் உலகில் சிறந்த 1000 வங்கிகள் பெயர் பட்டியலில் இடம்பிடித்தமைக்கு மேலதிகமாக இலங்கையின் விசேட வாடிக்கையாளர் வங்கியென்ற விருதினை 11வது தடவையாகவும் வென்றது. உள்ளுரில் பிஸ்னஸ் டுடே Top 10 தரப்படுத்தலில் முதல் 30 நிறுவனங்களில் முதலாம் இடத்தில் HNB உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles