உலகம்

2020இல் சிறந்த தொழில்புரியும் 40 இடங்கள் பட்டியலில் எயார்டெல் லங்கா

2020இல் சிறந்த தொழில்புரியும் 40 இடங்களுக்கான பட்டியலில் இடம்பிடித்த ஒரேயொரு தொலைத்தொடர்பு நிறுவனம் என்ற அந்தஸ்தைப் எயார்டெல் லங்கா பெற்றுள்ளது.

இலங்கையிலுள்ள இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான எயார்டெல் லங்காவை Great Place to Work நிறுவனம் நான்காவது தடவையாக இலங்கையில் சிறந்த தொழில்புரியும் 40 இடங்களுக்குள் பட்டியலிட்டுள்ளது.

இந்த மதிப்பீடு குறித்து கருத்து தெரிவித்த எயார்டெல் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அஷீஷ் சந்திரா, ‘இறுதியில், கலாச்சாரத்திற்கு உயிர் கொடுப்பதும் அந்த கலாச்சாரத்தை பெருமைக்கு வழிவகுப்பதும் மக்கள் தான்.

ஆகவே, எமது இந்த தொடர்ச்சியான வெற்றிக்கு காரணம், எமது ஆர்வமுள்ள வலுவான அணிகளின் தயாரிப்புக்கள், அவர்களது செயற்பாடுகள், கூட்டிணைந்து அவர்கள் உருவாக்கும் தொடர்புகளே ஆகும்.’ என தெரிவித்தார்.

விசேடமாக கொவிட்-19 தொற்றுநோய் பரவும் அபாயத்துடன், வர்த்தக ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக நிறுவனத்திடமுள்ள தொழில்நுட்ப மற்றும் ஒழுங்கமைப்புக்களில் உள்ள துரிதத் தன்மையை பயன்படுத்தி ‘புதிய இயல்பு’ நிலைமைக்கு ஏற்ற விதத்தில் நடவடிக்கைகளை மீளமைத்துக் கொள்ளும் சவால்களை ஊழியர்கள் பொறுப்பேற்பதனால் எயார்டெல்லின் நடவடிக்கைகள் துரிதமாகவுள்ளது.

இந்த காலத்திற்கு ஏற்றபடி மாற்றமடைந்ததனால் எவ்வித தடைகளும் இன்றி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் முக்கிய வேலையை செய்து முடித்தது மட்டுமன்றி தொழில்புரியும் இடங்களில் பல்வேறு தீர்வுகளுக்காகவும் வசதிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒன்லைன் தளங்களை நோக்கிய உள்-அலுவலக தொடர்புகளின் மாற்றம் மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் மனிதவள தீர்வுகள் ஆகியவை இதில் அடங்கும். ஆட்சேர்ப்பு முதல் டிஜிட்டல் on-bording, வேலை ஈடுபாடு, தகவல் தொடர்பு, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் வரை எயார்டெல் அதன் தொழில்நுட்ப மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை எவ்வித இடையூறும் இல்லாமல் மற்றும் திறமையான பணி அனுபவத்தை எளிதாக்குகிறது.

அத்துடன், Great Place to Work மதிப்பீட்டின் மூலம் எயார்டெல் நிறுவனம் ஒரு சிறந்த இடத்தில் பட்டியலிடப்பட்டதன் மூலம் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தி படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கங்களுக்கு ஊக்கம் அளித்து அதனை மேம்படுத்த ஏற்ற தொழில்புரியும் சூழலை உருவாக்குவதற்கு அந்த நிறுவனம் காட்டும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு இதன்மூலம் பிரதிபலிக்கிறது.

சாதி, மதம், பாலின பேதம் பாராமல் பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்து ஒரே சமமாக கலாச்சாரத்தை மேம்படுத்துவதை எயார்டெல்லினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பெண்கள் சேவை செய்யக் கூடிய சிறந்த தொழில்புரியும் இடங்களுக்கான ஆய்வுகள் 2019இன் ஆரம்ப வேலைத்திட்டத்தில் இலங்கையில் பெண்கள் தொழில்புரியக்கூடிய சிறந்த 10 நிறுவனங்கள் பட்டியலிலும் எயார்டெல் லங்கா நிறுவனம் இடம்பிடித்திருந்தமை விசேட அம்சமாகும்.

விசேட தேவையுடைய நபர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக எயார்டெல் லங்கா நிறுவனம் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் மிகவும் நெருக்கமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் அந்த பயிற்சியாளர்களின் விசேட நிபுணத்துவத்தின் அடிப்படையில் நிறுவனத்திற்குள் அவர்களது பயிற்சி கால எல்லையை நீடிப்பதற்கும் நிறுவனத்திற்குள் நிரந்தர தொழில்வாய்ப்புக்களுக்கு இணைத்துக் கொள்ளவும் வாய்ப்பளித்துள்ளது.

மேலும் அனைத்து பணியாளர் சலுகைகளும் மூன்றாம் தரப்பு ஊழியர்களுக்கு நீடிக்கப்படுகின்றன, இதன்மூலம் நிறுவனத்திற்குள் தனிநபரின் தனிப்பட்ட அர்ப்பணிப்பை மேம்படுத்தி எயார்டெல் நிறுவனம் விசேட தொழில்புரியும் இடமாக மாற்றியுள்ளது.

வருடம் தோறும் சுயாதீன கண்காணிப்புக் குழுவொன்றின் மூலம் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் பின்னர் Great Place to Work நிறுவனத்தினால் இந்த பட்டியல்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

Great Place to Work, நிறுவனத்தின் தலைமை காரியாலயம் அமெரிக்க ஐக்கிய இராஜ்ஜியத்தில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் சிறந்த நம்பிக்கை மற்றும் சிறந்த செயற்பாட்டுத் திறன் கொண்ட தொழில்புரியும் இடங்களின் கலாச்சாரத்தை மதிப்பீடு செய்வதற்காக உலகளாவிய ரீதியில் தலைமைத்துவம் வகித்து வருகிறது.

விசேடமாக தொழில் புரியும் இடங்களின் குறிகாட்டி மற்றும் பணிபுரியும் இடங்களின் விமர்சனங்கள் உள்ளிட்ட உரிமையாளர் மதிப்பீட்டு கருவிகள், ஆலோசனைச் சேவைகள் மற்றும் சான்றிதழ் அளிக்கும் வேலைத் திட்டங்கள் மூலம் Great Place to Workஇனால் நிலையான மற்றும் புகழ்பெற்ற பணியிட கலாச்சாரங்களின் முன்னுதாரணங்கள், மாதிரிகள் மற்றும் பிரத்தியேகங்களை வழங்குகின்றது.

இது இலங்கை உட்பட ஐந்து கண்டங்களில் 57க்கும் மேற்பட்ட நாடுகளில் வர்த்தக நடவடிக்கைகள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு நிர்வாக அளவிலான ஆலோசனை மற்றும் கலாச்சார ஆலோசனை சேவைகளை இது வழங்குகின்றது.

பாரதி எயார்டெல் லங்கா நிறுவனம் தொடர்பாக:

2009 ஜனவரி 12ஆம் திகதி இலங்கையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த பாரதி எயார்டெல் (எயார்டெல் லங்கா) நிறுவனம் தற்போது ஒருமில்லியன் வாடிக்கையாளர் மட்டத்தை நெருங்கிய இலங்கையின் வேகமான தகவல் தொலைத்தொடர்பு வலயமாகும். தமது வணிக செயற்பாடுகளை ஆரம்பித்த 2009ஆம் ஆண்டிலிருந்து 3 வருட குறுகிய காலப்பகுதிக்குள் எயார்டெல் நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரந்து விரிந்த சேவையை வழங்கியதோடு இன்று நாடு முழுவதிலும் தமது சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எயார்டெல் லங்கா தொலைத்தொடர்பு வலயமைப்பு சேவைகள் மற்றும் நிறுவன ரீதியான தீர்வுகள் உட்பட டிஜிட்டல் தொலைத்தொடர்பு சேவைகள் பலவற்றையும் வழங்குகின்றது. மேலதிக தகவல்களுக்கு www.airtel.lk என்ற இணையத்தளத்தை பார்வையிடவும்.

Hot Topics

Related Articles