இளைய தளபதி விஜய்க்கு சொந்தமான இலங்கை உள்ள சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தியில் எந்த வித உண்மையும் இல்லை என் விஜய் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிக சம்பளம் வாகும் முன்னணி நடிகரான விஜய்யிக்கு அதிகமான சொத்துக்கள் உள்ள நிலையில் அவரின் பதினைந்து ஆண்டுகள் பழமையான சொத்து ஆபத்தில் உள்ளதாக இணைத்தில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
குறித்த செய்தியில், விஜய் தனது மனைவியின் ஆலோசனையின் பேரில் இலங்கையில் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இலங்கையின் உள்ள சில முதலாளிகள் அந்த சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் விரைவில் இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிறுந்தன.
இருப்பினும், விஜய் தரப்பு இந்த அறிக்கையில் எந்த உண்மையும் இல்லை இது தவறான அறிக்கையை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
விஜய் 1999 இல், லண்டனில் குடியேறிய இலங்கை தமிழ் பெண் சங்கீதாவை மணந்தார். இதன் மூலம் இலங்கையுடன் நெருங்கிய தொடர்பு விஜய்க்கு உருவானது.
லண்டனில் சங்கீதாவின் தந்தை மிகப்பெரிய தொழிலதிபர் என்பதும் சங்கீதா விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது
முன்னதாக, ‘மாஸ்டர்’ படப்பிடிப்பின் போது, விஜய் வருமான வரி சோதனையை எதிர்கொண்டுடிருந்தார்.
விஜயின் அடுத்து ‘மாஸ்டர்’ படம் முடிவடைந்துள்ள நிலையில் அதன் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறார்கள்.