உலகம்

ராகுலின் வார்த்தையை மறக்கமாட்டேன் – ஆஸியின் அறிமுக வீரர்

இந்தியா மற்றும் ஆவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி நடைபெற்று முடிந்ததுள்ளது.

 

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக நடராஜன் அறிமுகமானது போல் ஆவுஸ்திரேலியா அணி சார்பாக இருபத்தொரு வயது ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் என்ற இளம் வீரர் அறிமுகியுள்ளார்.

தனது முதல் போட்டியிலேயே துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் திறமையை வெளிப்படுத்தியுள்ள இவர் போட்டி முடிந்தவுடன் தனது அறிமுக ஆட்டம் குறித்து பேசிய போது கே.எல்.ராகுல் கூறிய ” கோ வெல் யங்ஸ்டர்” என்ற வார்த்தையை நான் எப்பொழுதும் மறக்கமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது,

கே.எல்.ராகுல் விளையாட்டு குறித்து வினவிய போது நான் அதற்கு ” சிறிது நடுக்கத்துடனே தான் விளையாடி வருகிறேன்” என்று அவருக்கு பதில் அளித்தேன். அதன்பின்னர் அவர் என்னை நோக்கி பயப்பட வேண்டாம் ” கோ வெல் யங்ஸ்டர்” என்று ஊக்கப்படுத்தும் ஒரு வார்த்தையை கூறினார்.

அது எனக்கு ஒரு பாஸிட்டிவ் எனர்ஜியை தந்தது. அவரின் இந்த வார்த்தையை நான் எப்பொழுதும் மறக்கமாட்டேன் என்னுள் அது பசுமையான நினைவாக இருக்கும் என கிரீன் கூறியுள்ளார்.
மேலும் ராகுலின் இந்த செயலுக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

இந்த போட்டியில் இந்திய அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற்றது.

இப் போட்டியில், ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் 4 ஓவர்கள் பந்து வீசி விக்கெட்டுகள் எதுவும் எடுக்காமல் 27 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த போதும் துடுப்பாட்டத்தின் போது 27 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 27 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles