உலகம்

புரெவியால் தமிழ்நாட்டில் 7 பேர் பலி!

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக இரண்டாவது நளாகவும் பெய்த மழையால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் மூழ்கியுள்ளன. மேலும், கடுமையான சூறாவளியின் தாக்கத்தால் தமிழகத்தில் 07 மரணங்கள் பதிவாகியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 300 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இலங்கையின் மன்னார் வளைகுடாவில் புயல் வழுவிழந்து உள்ளதாகவும், இலங்கையில் அதன் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இலங்கையின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், அனுராதபுரா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேற்கு, சபராகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களிலும் காலி மற்றும் மாத்தரறை மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Hot Topics

Related Articles