உலகம்

இரு பெண் பிள்ளைகள் பரிதாபமாக பலி ! கர்ப்பிணித் தாய் படுகாயம் – வீதியைக் கடக்கும் போது விபரீதம் !

மொரட்டுவை எகொட உயன – புதிய காலி வீதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ள வீதி விபத்தில் இரு பெண் பிள்ளைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் அவர்களின் தாயாரான கர்ப்பிணி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இதன் போது ஏழு மற்றும் ஒரு வயது பெண் பிள்ளைகளே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று இரவு 10 மணியளவில் எகொட உயன – புதிய காலி வீதியின் பாதசாரிகள் கடவையில் பாதையை கடக்க முற்பட் கர்ப்பிணி தாய் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதனையடுத்து மூவரும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த இரு பெண் பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.

பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ள இரு பிள்ளைகளின் தாயாரான கர்ப்பிணி பெண் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கிள் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Hot Topics

Related Articles