இந்தியாவின் ஹாவேரி அருகே சிக்காவியில், தனது மகனே தாயை கற்பழித்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாவேரி மாவட்டம் சிக்காவி போலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வனஹள்ளி கிராமத்தை சேர்ந்த வயது 39 பெண்ணே இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவரது 21 வயது மகன் மற்றும் குறித்த பெண்ணும் கடந்த மாதம் நடுப்பகுதியில் திடீரென்று காணாமல் போயுள்ள நிலையில் நன்கு நாட்களின் பின் கங்கிபாவி கிராமம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் குறித்தப் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் பொலிஸாரினால் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தலைமறைவாகி இருந்த மகனை கைது செய்து போலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையின்போது முதலில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறினால் தனது தாயை கொலை செய்ததாக சந்தேக நபர் தெரிவித்தார். இருப்பினும் போலிசார் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
குறித்த சந்தேக நபர் தனது தாயை கற்பழித்து கொன்றதை போலிஸாரிடம் ஒப்புக்கொண்டார்.
கடந்த மாதம் 12 ஆம் திகதி தனது தாயாரை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்றபோது தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு சந்தேக நபர் கேட்டுள்ளார். இதில் கோபம் அடைந்த குறித்த தாய் கடுமையாக திட்டி கண்டித்துள்ளார்.
ஆனால் அதை பொருட்படுத்தாத சந்தேகநபர் தனது தாயாரை அடித்து, தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி உள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த குறித்த நபர் கங்கிபாவி கிராமம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு தாயை கடத்திச் சென்று கற்பழித்துள்ளார். பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.