உலகம்

”நடிகைகளை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றிய நமது புரட்சித்தலைவி“ கங்கனா நெகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் தனக்கென தனிஇடம் பிடித்தவர் செல்வி ஜெயலலிதா.

அடுத்தக்கட்டமாக தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித்தலைவி, நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதல்வர் என தமிழக அரசியலில் அசைக்க முடியாத தலைவியாக இரும்பு பெண்மணியாக உலா வந்தவர்.

அம்மா என்று தமிழக மக்களால் அழைக்கப்பட்ட பெறுமையுடைய ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி மரணமடைந்தார்.

இவரின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழ் நாட்டில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தலைவி என்ற பெயரில் உருவாகி வரும் இவரது வாழ்க்கை கதை திரைப்படத்தின் புகைப்படங்களை ஜெயலலிதாவின் மறைவு தினத்தை ஒட்டி தலைவி படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இவ் திரைப்படத்தில் ரனாவத், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கங்கனா ரனாவத் தனது டுவிட்டர் பதிவில், உலகம் நடிகைகளை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றிய, நமது புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்த பெருமைபடுகிறேன். பெண்மையைப் போற்றுவோம். என தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதிவில் ‘தலைவி’ படத்தின் ஒரு சில புகைபடங்களை பதிவு செய்துள்ள கங்கனா ரனாவத்,

புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மாவின் நினைவு நாளில் இந்த புகைப்படங்களை பதிவு செய்வதில் பெருமை கொள்கிறேன். ‘தலைவி’ படத்தின் படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

குறிப்பாக இயக்குனர் விஜய் அவர்கள் ஒரு மிகச்சிறந்த மனிதராக இந்த படத்தை இயக்கி முடித்துள்ளார். இன்னும் ஒரே ஒரு வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது என்றும் கங்கனா ரனாவத் குறிப்பிட்டுள்ளார்

திரையுலகில் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய ஜெயலலிதா நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.

இதில் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் உடன் மட்டும் 28 படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles