உலகம்

கோவேக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட அமைச்சருக்கு கோரோனா தொற்று உறுதி!

கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட அரியானாவின் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அரியானாவில் கோவேக்சின் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட பரிசோதனை கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடங்கியது. இதில் முதல் தன்னார்வலராக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் பங்கேற்றார். அம்பாலா கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தனது உடலில் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தி சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக 67 வயதான அரியான மந்திரி அனில் விஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அனில் விஜ் வெளியிட்டுள்ள பதிவில், “ எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீப காலங்களில் என்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என அறிவுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

எனினும் கோவாக்சின் மருத்துவ பரிசோதனைகள் இரண்டு டோஸ் அட்டவணையை அடிப்படையாகக் கொண்டவை இரண்டாவது டோஸுக்கு 14 நாட்களுக்குப் பிறகு தடுப்பூசி செயல்திறன் தீர்மானிக்கப்படும். என்று பாரத் பயோடெக் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பாரத் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு சோதிக்க இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகள் வெற்றியடைந்ததையடுத்து, மூன்றாம் கட்ட சோதனைக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து இந்தியா முழுவதும் பல்வேறு மருத்துவமனைகள் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles