உலகம்

தடுப்பூசி கொரோனா தொற்றுக்கான பதில் இல்லை – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!

பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்துவருவதுடன், நாட்டுக்கு நாடு கொரோனா தொற்று வழக்குகளின் நிலைமை வேறுபாட்டை காட்டுவதன் காரணமாக, கொவிட் -19 தொற்றுநோய்க்கு உலகளவில் முழுமையாக பொருந்தக்கூடிய தீர்வுகள் இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) நிபுணர் ஒருவர் வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய WHO இன் சுகாதார அவசரகால திட்டத்தின் நிர்வாக பணிப்பாளரான மைக் ரியான், “தடுப்பூசிகள் கொரோனா வைரஸூக்கன முழுமையான தீர்வாக இருக்காது” என்றும், தடுப்பூசிகள் மற்றும் தடும்பு மருந்துகள் “இப்போது நம்மிடம் உள்ள கொரோனா விற்கு எதிரான கருவித்தொகுப்பில் ஒரு பெரிய சக்திவாய்ந்த கருவிகள் மட்டுமே என்றும் எச்சரித்தார். ”

“அதனால்தான் குறிப்பாக கொரோனா தொற்று காரணமாக தீவிரமாக பாதிக்கப்பட்டுள் நாடுகள், கொரோனா வழக்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கும் குறைப்பதற்கும் முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

WHO நிபுணரின் கூற்றுப்படி, அடுத்த ஆறு மாதங்களுக்குள் இரண்டு கட்டங்கள் இருக்கக்கூடும்: முதலாவது இறப்புகளையும் கடுமையான நோய்களையும் கட்டுப்படுத்துவதும் குறைப்பதும் ஆகும், இரண்டாவதாக, நோயின் உண்மையான பரவலைக் கட்டுப்படுத்துவதாகும்.

இதற்கிடையில், WHO சுகாதார அவசரகால திட்டத்தின் COVID-19 தொழில்நுட்ப முன்னணி மரியா வான் கெர்கோவ் தெரிவிக்கையில், அடுத்த ஆறு மாதங்கள் கடினமானவை, ஆனால் நம்பிக்கையுள்ளதாக இருக்கும் எனவும், அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

இதன் போது உறையாற்றிய உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸின், தொற்றுநோய் உலகில் இருந்து நீங்குவதற்கு இன்னும் நீண்ட காலம் எடுக்கலாம்.

மேலும் எதிர்வரும் நாட்களில் நாடுகளின் தலைவர்களும் குடிமக்களும் எடுக்கும் முடிவுகள் குறுகிய காலத்தில் வைரஸின் பரவலை கட்டுப்படுத்துவதையும் மேலும் இந்த தொற்றுநோய் எப்போது முழுமையாக நீங்கும் என்பதையும் தீர்மானிக்கும் என்றார்.

Hot Topics

Related Articles