உலகம்

இலங்கையில் மேலும் கொரோனா மரணங்கள் பதிவு! இன்று 669 பேருக்கு தொற்று உறுதி

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஏழு மரணங்கள் பதிவாகியுள்ளது.

91, 53, 56, 81, 84, 66, 62, ஆகிய வயதுகளை உடைய மூன்று ஆண்களும், 4 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் மூவர் வீட்டிலும் ஏனையவர்கள் வைத்திய சாலையிலும் வெவ்வேறு தினங்களில் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கொரோனாவால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் இன்றைய தினம் 669 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 182 பேர் சிறைச்சாலைகளுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்த நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளனவர்களின் மொத்த எண்ணிக்கை 27,228 ஆக உயர்வடைந்துள்ளது.

7,008 கொரோனா தொற்றாளர்கள் நாடு முழுவதும் உள்ள கொரோனாவிற்கான வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

அத்துடன் இன்றைய தினம் 501 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,090 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றையதினம் பதிவான கொரோனா தொற்றாளர்கள் விபரம்

Hot Topics

Related Articles