உலகம்

வரையறையற்ற கொடுக்கல் வாங்கல்களை இலகுவாக்கும் அமானா வங்கி

இலங்கையில் மிகப்பெரிய பண வைப்பு வலையமைப்பை கொண்டுள்ள அமானா வங்கியின் நடைமுறை கணக்கு வாடிக்கையாளர்களுக்கு இப்பொழுது 900 க்கு அதிகமான வைப்பு மையங்களினூடாக இலகுவாக தங்கள் பண மற்றும் காசோலை கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியும்.

இவ்வலையமைப்பில் 32 கிளைகள், 19 சுய வங்கி சேவை நிலையங்கள் மற்றும் 850 க்கும் அதிகமான Pay&Go சாவடிகள் அடங்கும்.

இந்த வசதி தொடர்பில் அமானா வங்கியின் வைப்புகளுக்கான தலைமை அதிகாரி அர்ஷத் ஜமால்தீன் கருத்துத் தெரிவிக்கையில், “பல வியாபாரிகள் தங்கள் நாளாந்த கொடுக்கல் வாங்கல்களுக்கு நடைமுறை கணக்கை பயன்படுத்துகின்றனர்.

அவர்கள் கொடுக்கல் வாங்கல்களை தமது நாளாந்த வருமானத்தினூடாகவே மேற்கொள்கின்றார்கள். ஆகவே, அவர்களின் நாளாந்த வருமானத்தை இலகுவாகவும் எவ்விடத்திலும் எந்நேரத்திலும் வங்கியில் வைப்பு செய்யும் வசதி அத்தியாவசியமானதாகும்.

எங்கள் வளர்ந்து வரும் 900 க்கும் அதிகமான பண வைப்பு வலையமைப்பு மற்றும் எங்கள் நடைமுறை கணக்கு வழங்கும் மேலதிக அனுகூலங்கள் வியாபாரிகளின் மற்றும் தனிநபர்களின் வரையறையற்ற கொடுக்கல் வாங்கல்களுக்கான தேவையை நிவர்த்தி செய்வது தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.” என்றார்.

(அர்ஷத் ஜமால்தீன் -வைப்புகளுக்கான தலைமை அதிகாரி)

 

வியாபாரங்களை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கத்தின் திட்டத்தின் பிரகாரம், அமானா வங்கி, 2020 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னதாக நடைமுறைக் கணக்கை ஆரம்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஆகக்குறைந்த ஆரம்ப வைப்புத் தொகையை 5000/- ரூபாயாக குறைத்துள்ளது.

அத்துடன், இலவசமாக காசோலபை் புத்தகம் ஒன்றையும் வழங்குகின்றது. அமானா நடைமுறைக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தமது சகல கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் SMS விழிப்பூட்டல்களை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், e-கூற்றுகள் (தினசரி, வாராந்தம் அல்லது மாதாந்தம்), இணைய மற்றும் மொபைல் வங்கிச் சேவை, வாசலடி வங்கிச் சேவைகள் மற்றும் நடைமுறைக்கணக்கிலிருந்து சேமிப்புக் கணக்குக்கு பணத்தை மாற்றிக் கொள்ளக்கூடிய Sweep in Sweep Out ஆகிய வசதிகளையும் வழங்குகின்றது.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியைப் பெற்று இயங்கும் அமானா வங்கி பிஎல்சி, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும்.

உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் வட்டிசாராத மக்களுக்கு நட்பான வங்கியியல் முறையை பின்பற்றி இயங்கும் முதலாவது மற்றும் ஒரே வங்கியாகவும் அமானா வங்கி திகழ்கின்றது. வளர்ச்சிக்கு வலுச்சேர்ப்பது மற்றும் வாழ்க்கைக்கு வளமூட்டுவது எனும் நோக்கத்தின் பிரகாரம் இயங்கும் அமானா வங்கி, நாடு முழுவதிலும் பரந்த கிளையமைப்பு மற்றும் சுய வங்கிச் சேவை நிலையங்களைக் கொண்டுள்ளதுடன், பண மீளப் பெறுகைகளுக்காக 4500 க்கும் அதிகமான ATMகள் மற்றும் 850 க்கும் அதிகமான பண வைப்பு நிலையங்கள் ஆகியவற்றைக் கொண்டு சேவைகளை வழங்கி வருகின்றது.

இணைய மற்றும் மொபைல் வங்கிச் சேவை, 24×7பண வைப்பு இயந்திரங்கள் மற்றும் பெண்களுக்கு பிரத்தியேகமான வங்கியியல் அலகுகள் போன்றவற்றினூடாக வாடிக்கையாளர்கள் அனுகூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

இலங்கை மத்திய வங்கியினால் அனுமதி அளிக்கப்பட்ட அமானா வங்கி பி.எல்.சி.; கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட ஒரு தனி நிறுவனமாகும். ஜித்தாவில் தலைமையகத்தைக் கொண்ட இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி (ISDB) குழுமம் பிரதான பங்குதாரர் என்ற முறையில் அமானா வங்கியில் 29.97% பங்குளைக் உரிமம் கொண்டுள்ளது.

ISDB குழுமம் என்பது ‘AAA’ தரப்படுத்தலைப் பெற்ற பல்துறை அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. அமானா வங்கிக்கு எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் கிடையாது. அதன் பிரத்தியேகமான சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமான அனாதை பராமரிப்பு நம்பிக்கை நிதியை ‘OrphanCare’ Trust ஐ மாத்திரமே பேணி வருகின்றது.

Hot Topics

Related Articles