உலகம்

முதலில் கொரோனா தடுப்பூசி யாருக்கு ! பட்டியலை வெளியிட்டது இங்கிலாந்து

பைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பரவலான பயன்பாட்டுக்கு இங்கிலாந்து சுகாதார பிரிவு இம்மாதம் தொடக்கத்தில் ஒப்புதல் அளித்திருந்தது.

இந்நிலையில் தற்போது இவ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்னுறிமை வழங்கப்படும் தரப்பினர் குறித்து 09 பகுதிகளை கொண்ட உத்தியோக பூர்வ பட்டியலை இங்கிலாந்து வெளியிட்டுள்ளது.

இதில் பராமரிப்பு இல்லங்களில் உள்ள முதியவர்களுக்கும் ஏற்கனவே சுகயீனமானவர்களுக்கும் முன்னுறிமை வழங்கப்பட்டுள்ளது.

இவ் பட்டியலின் படி,

01. முதியவர்கள் இல்லங்களில் உள்ளவர்களுக்கம் அவர்களை பராமரிப்பவர்களுக்கும்.

02. 80 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், முன் வரிசை சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு தொழிலாளர்கள்

03. 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்,

04.70 வயதுக்கு மேற்பட்ட மருத்துவ ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய நபர்கள்

05. 65 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்

06. 16 வயது முதல் 64 வயது வரை நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ளவர்கள்.

07.60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்

08. 55 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்

09. 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்.

 

இதன் மூலம் பைசர் மற்றும் பயோஎன்டெக்கின் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடாக இங்கிலாந்து விளங்குகின்றது.

இவ் தடுப்பூசி ஆய்வின் போது உடலில் செலுத்தப்பட்ட 95% பேருக்கு கொவிட்-19 தொற்றில் இருந்து பாதுகாப்பளிக்கும் இதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவது பாதுகாப்பானது என்று இங்கிலாந்தின் ஒழுக்காற்று அமைப்பான எம்.ஹெச்.ஆர்.ஏ தெரிவித்த நிலையில் அவ் அமைப்பின் பரிந்தரைக்கு அமைய தடுப்பூசி வழங்குவதற்கான முன்னுறிமை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இரண்டு டோஸ்களாக வழங்கப்பட வேண்டிய இந்த தடுப்பூசியின் நான்கு கோடி டோஸ்களை இங்கிலாந்து ஏற்கனவே கொள்வனவு செய்வதற்கு தயாராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles