உலகம்

பொது சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு விளக்கமறியல்

பண்டாரகம அட்டுலுகம பகுதியில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபரை தனிமைப்படுத்தல் நிலைத்திற்கு அழைத்துச்செல்ல வருகை தந்த பொது சுகாதார பரிசோதகர் மீது குறித்த நபர் உமிழ்ந்துள்ளதுடன் தகாதா முறையில் நடந்து கொண்டுள்ளார்.

வாகனத்தில் செல்லவும் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் அழைத்துச்செல்வதற்காக வருகை தந்த வாகனத்தின் கதவினையும் பலமுறை திறந்து வேகமாக மூடி அதிகாரிகளை அவதூராக பேசியுள்ளார்.

பண்டாரகம அட்டுலுகம பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ள குறித்த சம்பவத்தையத்து கொரோனா தொற்றாளரை முழுமையாக குணமடைந்ததன் பின்னர் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பண்டாரகம, அட்டுளுகம பகுதியில் கொவிட்-19 கடமைகளை முன்னெடுத்த பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய கொவிட்-19 தொற்றாளர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த கொரோனா நோயாளர்களை கடந்த புதன்கிழமை வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டனர்.

விசாரணைகளுக்கமைய குறித்த நபர் தொடர்பில் பொலிஸார் நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்ததையடுத்து நீதிமன்றம் அவருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.

வைரஸ் தொற்று காரணமாக குறித்த நபர் சிகிச்சை பெற்று வந்தமையினால் அவரை குணமடைந்த பின்னர் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தன.

எனினும் சந்தேக நபர் இன்று காலை கைதுசெய்யப்பட்டதுடன் அவரை பாதுகாப்பான முறையில் பாணந்துறை நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்தியும் உள்ளனர்.

இதன்போது சுகாதார அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றம் அவரை டிசம்பர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

அதன்படி குறித்த நபரை சிறப்பு பாதுகாப்பு மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களுடன் வெலிக்கட சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சமூகத்தின் நலன் கருதி செயற்படும் அரச உத்தியோகத்தர்களை அவமதிக்கும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

Hot Topics

Related Articles