கொரோனாவிற்கான தடுப்பூசியை தமது நாட்டு பிரஜைகளுக்கு இலவசமாக பெற்றுக்கொடுக்கவுள்ளதாக பிரான்ஸ் நாட்டு பிரதமர் ஜோன் கெஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு பட்ஜெட்டின் சமூக பாதுகாப்பிற்கான நிதி ஒதிக்கீடு இந்த நோக்கத்திற்காக திட்டத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளதாக அவர் மேலும் அதெரிவித்துள்ளார்.
இவ் திட்டத்திறக்காக சுமார் 1.5 பில்லியன் யூரோ செலவாகும் என கணிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படமாட்டாது என்று பிரெஞ்சு பிரதமர் தனது அமைச்சரவையுடனான சந்திப்பில் கூறியுள்ளார்.
குறித்த அறிவிப்பின் போது,
ஜனவரி மாதத்தின் ஆரம்பத்தில் 1 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் எனவும், அடுத்தக்கட்டமாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிக ஆபத்து உள்ள 14 மில்லியன் மக்களுக்கு பெப்ரவரி தொடக்கம் தடுப்பூசி போடப்படும். என தெரிவித்துள்ள பிரன்ஸ் பிரதமர்,
தடுப்பூசிகளை உருவாக்கும் பல்வேறு மருந்து நிறுவனங்களிடமிருந்து சுமார் 200 மில்லியன் டோஸ்களை பிரான்ஸ் முன்பதிவு செய்துள்ளது, இது 100 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு போதுமானது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 2,257,000 ஐ கடந்துள்ளதுடன் இறப்பு எண்ணிக்கை 54,140 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.