உலகம்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இலங்கை நடிகையின் இன்ஸ்டா புகைப்படம்

பிரபல பொலிவுட்டில் தற்போது பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் இலங்கையை சேர்ந்த ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அதிரடியான நிர்வாண புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தர்மசாலாவில் பூத் போலீஸ் படத்தில் நடித்து வருகிறார் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ்.

அந்த படத்திற்காக எடுத்த காட்சியின் மேக்கிங் ஸ்டில்லை தான் தற்போது தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் ஜாக்குலின் பதிவிட்டுள்ளார்.

46.7 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டுள்ள ஜாக்குலினின், இந்த நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு 3 மணி நேரத்தில் 1.5 மில்லியன் ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.

இவர் ஏற்கனவே டி-சீரிஸ் பூஷன் குமார் தயாரிப்பில் உருவாகிய மேரே ஆங்னே மெயின் எனும் வீடியோ பாடலுக்காக அரை நிர்வாணமாக நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தார்.

இலங்கையை சேர்ந்தவர் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ், கடந்த 2009ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான அலாதீன் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். சல்மான் கானின் கிக், ரேஸ் 3, ஜூட்வா 2. டிஷூம், எ ஜெண்டில்மேன், ஹவுஸ்ஃபுல் 3 என ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

லாக்டவுன் நேரத்தில் சல்மான் கானின் பண்ணை வீட்டிலேயே தங்கி, சல்மான் கான் இயக்கத்தில் உருவான Tere bina என்கிற காணொளி பாடலில் நடித்திருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles