உலகம்

கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு! இன்று 521 தொற்றாளர்கள் அடையாளம்

கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிலியந்தலையை சேர்ந்த 72 வயது ஆண் ஒருவரே கொரோனா தொற்று காரணமாக ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 130 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இன்று 521 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 26,559 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 6,992 பேர் சிகிச்சைப்பெற்று வரும் நிலையில் 19,438 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 390 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles