உலகம்

கனடாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் இந்தியா

டில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதனை கண்டித்து இந்திய அரசு முறைப்படி தூதரகம் வழியாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் இந்திய மத்திய அரசு விவசாய குழுக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில், டில்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இம்மாதம் 01ஆம் திகதி கருத்து தெரிவித்திருந்தார்.

அதில்,
இந்தியாவில் நடைபெற்றுவரும் விவசாயிகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம்.

உரிமைகளை பாதுகாக்க அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களுக்கு கனடா எப்போதும் ஆதரவு அளிக்கும். என தெரிவித்திருந்தார்.

அத்துடன் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் போராட்டங்களும் நடைபெற்றது.

இதனையடுத்து, கனடா பிரதமரின் கருத்துக்கும், தூதரகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கும் இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என தெரிவித்து இந்திய அரசு முறைப்படி தூதரகம் வழியாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கனடா நாட்டு தலைவர்கள் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும், கனடா தலைவர்கள் இது போன்ற கருத்துக்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தால் இருநாட்டு உறவிலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Hot Topics

Related Articles