கட்டுநாயக்க விமான நிலைய புறப்பாடு முனையத்தில் உள்ள பார்வையாளர் கூடம் நாளை முதல் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு பயணி ஒரு விருந்தினரை மட்டுமே பார்வையாளர் கூடத்திற்கு அழைத்து வர அனுமதிக்கப்படுவார்.
பார்வையாளர்கள் மற்றும் பயணிகள் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள சுகாதாரக் நடைமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் பார்வையாளர்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று விமான நிலையம் அறிவித்தள்ளது.
இதேவேளை, கோவிட் 19 இன் உலகளாவிய தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக, தங்கள் கடமை நிவாரணத்தின் கீழ் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத பயணிகள் வெளிநாட்டினருக்கான கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறை காரணமாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவடைந்து அதிகபட்சம் ஒரு மாத காலத்திற்குள் விமான நிலையத்திற்கு வந்து வருகை முனையத்தில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் உள்ள கடைகளிலிருந்து பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு 0112263017 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும் படி விமான நிலையம் அறிவித்தள்ளது.