உலகம்

அமெரிக்காவின் 3 முன்னாள் ஜனாதிபதிகள் எடுத்துள்ள முடிவு!

அமெரிக்காவின் மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளதுடன் அதனை படம் பிடிப்பதற்கும் அனுமதி வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் பராக் ஒபாமா, ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் பில் கிளிண்டன் ஆகியோரே இவ்வாறு தங்களுக்கு கொரோனா தடுப்பூசியை ஏற்றும் போது நேரடியாக ஒளிபரப்ப முன்வந்துள்ளனர்.

“ஆபத்து குறைவாக உள்ளவர்களுக்காக இது தயாரிக்கப்படும் போது, ​​நான் அதை எடுத்துக்கொள்வேன் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று திரு ஒபாமா புதன்கிழமை ஒரு வானொலி நேர்காணலில் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் இது வரை எந்த கொரோனா தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்கப்படாத நிலையில் சுகாதார அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்டவுள்ள கொரேனா தடுப்பூசியை இவர்கள் ஏற்றிக்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்த பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட உள்ளது.

அமெரிக்காவில் அன்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கொரேனா தடுப்பூசியை பெற தயங்குகிறார்கள் என தெரியவந்துள்ளது.

ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி சோதனைகளின் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் அக்டோபரில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பு – சுமார் 10 அமெரிக்கர்களில் ஆறு பேர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகக் காட்டியது, எனினும் இது செப்டம்பர் மாதத்தில் 50% வீதமாக குறைவடைந்துள்ளது.

இந்நிலையில் அரசாங்க சுகாதார கட்டுப்பாட்டாளர்கள் வரும் வாரங்களில் ஃபைசர் மற்றும் மாடர்னாவின் தடுப்பூசிகளை ஆய்வு செய்வார்கள்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Hot Topics

Related Articles