உலகம்

கொரோனாவால் இலங்கையில் 5 பேர் மரணம்

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயது பெண் ஒருவரும்,கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சசைப்பெற்றுவந்த நிலையில், நவம்பர் மாதம் 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 12 ஐ சேந்த 89 வயது ஆண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 10 ஐ சேந்த 71 வயது ஆண், டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி தனது விட்டில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 02 ஐ சேந்த 78 வயது ஆண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சசைப்பெற்றுவந்த நிலையில், டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 129 ஆக உயர்வடைந்துள்ளது.

இதே வேளை நாட்டில் இன்று 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்ககை 25,760 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான 6,604 பேர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை மையங்களில் சிகிச்சைப்பெற்று வருவதுடன் 19,032 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தும் உள்ளனர்.

Hot Topics

Related Articles