தற்போது தமது புதிய கட்சி குறித்து ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் பாணியில் அறிவிப்பு விடுத்துள்ளார்.
அவர் இது குறித்து இரண்டு பதிவுகளை தமது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துளார்.
ரஜினிகாந்த் பாபா முத்திரையுடன் பதிவிட்டுள்ள டுவிட்டர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜனவரியில் கட்சித் துவக்கம்,
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல 🤘🏻 pic.twitter.com/9tqdnIJEml— Rajinikanth (@rajinikanth) December 3, 2020
அத்துடன் தனது கட்சிக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் குறித்தும் பதிவிட்டுள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
— Rajinikanth (@rajinikanth) December 3, 2020
இதனிடையே சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளுக்கு உரையாற்றிய போது,
கொரோனாவால் என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான். கொடுத்த வாக்கில் இருந்து என்றுமே தவற மாட்டேன். நான் வெற்றியடைந்தாலும் அது மக்களின் வெற்றி. தோல்வி அடைந்தாலும் அதுமக்களின் தோல்வி. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. ஆட்சி மாற்றம் நடக்கும்; அரசியல் மாற்றம் நடக்கும். என தெரிவித்துள்ளார்.
ரஜினி கட்சி தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்திய போதிலும் அரசியல் கட்சி துவங்குவது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனமாக இருந்து விட்டார். விரைவில் முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழ் நாட்டில் பெரும்பாலான மக்களின் எதிர்பார்பாக இருந்த சூப்பர் ஸ்டாரின் அரசியல் பிரவேசம் குறித்த செய்தி வெளியானதையடுத்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.