உலகம்

Havelock City குடியிருப்புகளை கொள்வனவு செய்வோருக்கு DFCC வங்கியின் ஒப்பந்தம்

வலுமிக்க வீட்டு உரிமையாளர்களுக்கு சிறப்பு DFCC வீட்டுக்கடன் சேவைகளை வாங்கும் விதமாக, DFCC வங்கியானது சமீபத்தில் Havelock City திட்டத்தின் மேம்பட்டளரான Mireka Homes புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதன் பிரதிபலனாக Havelock City அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கென வடிவைமைக்கப்பட்ட ஒரு சிறப்பு வீட்டுக்கடன் தயாரிப்பை DFFC முன்மொழிந்துள்ளது.

கட்டமைக்கப்பட்ட கடன் திட்டங்கள், சலுகைக்காலங்கள் மற்றும் ஆரம்பகால கட்டண தள்ளுபடிகள் ஆகிய அனைத்தும் இந்த வீட்டுக்கடன் தயாரிப்பின் முக்கிய அம்சங்களாகும்.

Havelock City குடியிருப்பு மற்றும் வணிக அம்சங்கள் கொண்ட பல்வகைபயன்பாட்டு அபிவிருத்தி கட்டுமானம் ஆகும்.

இது கொழும்பு மாநகரின் மத்தியில் 18ஏக்கர் முதன்மை நிலப்பரப்பில் அமையப்பெற்றுள்ளது. குடியிருப்பு தொகுதிகள் கட்டம் கட்டமாக கட்டப்பட்டன.

அதில் நான்காவதும் மற்றும் இறுதியுமான கட்டம் தற்போது நிறைவடையும்
தருவாயில் உள்ளது 2021 பெப்ரவரியுடன் இதன் பணிகள் நிறைவுறுவதுடன் ஆடம்பர அலகுகள் விற்பனைக்கு தயாராக இருக்கும். கட்டம் 4 ஐ தவிர கட்டம் 3 ஆனது புரிந்துணர்வு கொண்ட வாடிக்கையாளர்களுக்காக
இணக்கச்சான்றிதழ் (COC approval) பெற்ற குறிப்பிட்ட எண்ணிக்கையான அலகுகளை கொண்டுள்ளது.


Havelock Cityல் உள்ள சங்கக்கட்டடம், அதன் குடியிருப்பாளர்களுக்காக ஸ்குவாஷ் அரங்குகள், உடற்பயிற்சிக்கூடங்கள், நீச்சல் தடாகங்கள், மண்டபங்கள், சிகையலங்கார நிலையம், சலவையகம், சிறு திரையரங்கு, சிறு சந்தை மற்றும் அருந்தகம் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.

பிரத்யேகமான 7 ஏக்கர் பரப்புடைய பச்சைபசேலென்ற
தோட்டமானது நகருக்குள்ளேயே ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் வகையில் நடைபாதைகள், ஓடுபாதைகள், திறந்தவெளி உடற்பயிற்சி தளங்கள் அத்துடன் மினி-கோல்ஃப் ஆகியவற்றை கொண்டுள்ளது.

இந்த அபிவிருத்தி திட்டமானது BOI இனால் அங்கீகரிக்கப்பட்ட இணை நிறுவனமும், கொழும்பில் உள்ள தனித்துவமிக்க கட்டடமான உலக வர்த்தக மையத்தின் முகாமையாளர், மேம்பாட்டாளர், உரிமையாளருமான Overseas Realty (Ceylon) PLCன் தலைவரான திரு. S P Tao அவர்களின் சிந்தனையில் உதித்ததாகும்.

Havelock City குடியிருப்பில் தனக்கென ஒரு இடத்தை முன்பதிவு செய்யும் எவருக்கும் DFCC வங்கி சிறப்பு வீட்டு கடனை அளிக்கிறது. ஒரு நிலையான வருமானம் ஈட்டுபவர், தொழில்முறை அல்லது ஒரு சுயதொழில் செய்பவர் எவரும் மாதாந்திர கடன் உறுதிப்பாட்டை பூர்த்தி செய்ய போதுமான வருமானம் கொண்டவர் எனின் DFCC வீட்டுக் கடனுக்கு
விண்ணப்பிக்க தகுதியானவராக கருதப்படுவார்.

விண்ணப்பதாரிகள் முன்-அங்கீகரிக்கப்பட்ட வீட்டுக்கடனை தெரிவு செய்யலாம். இதற்கு 3 வேலை நாட்களுக்குள் ஒப்புதல் வழங்கப்படும். ஒவ்வொரு DFCC கிளையிலும் உள்ள எங்கள் நிபுணர் குழுவானது வேறு எங்கும் இல்லாத அளவு சிறப்பான சேவையை வழங்குவர்.

மேலும் பரிவர்த்தனை முழுவதும் உங்களுக்கு முழுமையான ஆதரவு
வழங்கப்படுதலை உறுதி செய்வர்.

DFCC வீட்டுக்கடனானது Havelock City அடுக்குமாடி குடியிருப்பின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் சலுகைக்காலம், ஆரம்பகால கட்டணத்தள்ளுபடி மற்றும் கட்டமைக்கப்பட்ட வசதிகள் போன்ற சிறப்பம்சங்களை உள்ளடக்கியது.

DFCC வங்கியானது நாடுமுழுவதும் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட வலுவான கிளை வலையமைப்பை கொண்டுள்ளதுடன் அக்கிளைகள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும்
வகையில் பொறுப்புணர்வுடன் இயங்குகின்றன.

வாடிக்கையாளருக்கு அவரது வீட்டிற்கே சென்று சேவை
செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட 140க்கும் மேற்பட்ட வங்கி நிர்வாகிகளை உள்ளடக்கிய ஒரு குழு ஒன்று வங்கியினால் செயற்படுத்தப்பட்டுள்ளது.

வங்கிக்கு செல்ல ஒரு நேரத்தை ஒதுக்குவது பலருக்கு சவாலான விடயம் ஆகும் ஆகவே DFCC வங்கியானது

வாடிக்கையாளர்களுக்கு வேண்டிய நேரத்தில் வேண்டிய இடத்தில் சேவையை வழங்குவதற்குகான ஆயத்தங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. DFCCயின் டிஜிடல் (digital) தளங்கள் மூலம் அதன் வாடிக்கையாளர்களுக்கு மிக சிறந்த சேவையினை வழங்க தயாராகவிருப்பதுடன் கடன் தொடர்பான சேவைகளையும் மிக இலகுவாக
பெற்றுகொள்ள கூடியதாயிருப்பது விசேடம்சமாகும்.

எம்மை பற்றி

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாக வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளை அள்ளி வழங்கும் DFCC வங்கியானது 65 வருட பாரம்பரியத்தை கொண்ட ஒரு முழு சேவை வணிக வங்கியாகும். Business Todayன் இலங்கையின் சிறந்த 30 நிறுவனங்களில் ஒன்றாக இந்த வங்கி இடம்பெற்ற அதேவேளை Brand Financeன் அதி மதிப்புமிக்க 100 வர்த்தக நாமங்களின் பட்டியலில் இடம்பெற்றது. DFCC வங்கியானது A+ (lka) நிலையுடையது என வரையறுக்கப்பட்ட Fitch Ratings Lanka நிறுவனத்தால் தரப்படுத்தப்பட்டுள்ளது.

Hot Topics

Related Articles