உலகம்

7 ஆண்டுகள் தடைக்கு பின் களமிறங்கும் இந்திய கிரிக்கெட் வீரர்

கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்கு 7 ஆண்டு கால தடைக்காலம் முடிவடைந்ததையடுத்து வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் வலைப் பயிற்சிக்கு திரும்பியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு கிரிக்கெட் விளையாட விதிக்கப்பட்டிருந்த தடை, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது.


இதனையடுத்து அவர் மீண்டும் மாநில கிரிக்கெட் அணியில் இடம்பெறுவாரா என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அதற்காக அவர் தீவிரமான பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.

இப்போது கேரள மாநிலத்தில் நடைபெற இருக்கும் பிரசிடெண்ட் கோப்பை டி20 தொடரில் பங்கேற்பதற்கு ஸ்ரீசாந்திற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் கொச்சியில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர் ‘‘எனக்கு வாய்ப்பளித்த கேரள மாநில கிரிக்கெட் சங்க தேர்வாளர்களுக்கு நன்றி. என்னுடைய 7 ஆண்டு காத்திருப்புக்கு கிடைத்த பலன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் 87 விக்கெட்டுகளையும் 53 ஒருநாள் போட்டிகளில் 75 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் ஸ்ரீசாந்த்.

2007 உலகக்கோப்பை டி20 தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றபோது இவரது பங்களிப்பு பெரிதும் பேசப்பட்டது.

அந்தத் தொடரில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்களுக்கு ஸ்ரீசாந்த் பவுலிங்கில் சிம்மசொப்பனமாக இருந்தார்.

Hot Topics

Related Articles