உலகம்

மன்னரின் மனைவி மெய்க்காப்பாளருடனான தகாத உறவு : மறைக்க விலையுயர்ந்த பரிசுகளை வழங்கியமை அம்பலம்

மெய்க்காப்பாளருடனான உறவை மறைக்க டுபாயின் இளவரசி ஹயா 12 கோடிக்கு மேல், விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி உள்ளார்.


டுபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் ஆறாவது மனைவி இளவரசி ஹயா, தனது பிரிட்டிஷ் ரஸ்ஸல் ஃப்ளவர்ஸ் என்ற மெய்க்காப்பாளருடன் தொடர்பு வைத்திருந்தார்,
மேலும் அவர்களது இரண்டு வருட தொடர்பு குறித்து வாய்திறக்காமல் அமைதியாக இருக்க அவருக்கு ரூ.11.85 கோடி வழங்கினார்.

 

இளவரசி ஹயா மெய்க்காப்பாளருக்கு பல விலையுயர்ந்த பரிசுகளையும் வழங்கினார், இதில் ரூ.11.85 கோடி மதிப்புள்ள கடிகாரம் மற்றும் விண்டேஜ் ஷாட்கன் ஆகியவையும் அடங்கும்.

 

இதுகுறித்து டெய்லி மெயிலில் வெளியிட்டு உள்ள தகவலில் இளவரசி ஹயா 37 வயதான ரஸ்ஸல் ஃப்ளவர்ஸை எப்போதும் தனது பக்கத்திலேயே இருப்பதை உறுதிசெய்ய தனது பணத்தை பயன்படுத்தி உள்ளார்.

ரஸ்ஸலின் மனைவி அவர் பணம் மற்றும் பரிசுகளால் மயங்கியதாக நம்பினார். அவர் அவருக்கு நிறைய விலையுயர்ந்த பரிசுகளை வழங்கினார், மேலும் அவர் எப்போதும் தனது பக்கத்திலேயே இருப்பதை உறுதிசெய்தார்” என்று ரஸ்ஸல் ஃப்ளவர்ஸின் மனைவியின் நண்பர் ஒருவர் மெயில் ஆன்லைனிடம் தெரிவித்துள்ளார்.

 

இந்த விவகாரம் பற்றி ஃப்ளவர்ஸ் மனைவி அறிந்ததும், அவர் முற்றிலும் உடைந்துவிட்டதாகவும், ஃப்ளோவர்ஸை விவாகரத்து செய்ய முடிவு செய்ததாகவும் மெயில் ஆன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.

 

இளவரசி ஹயா மற்றும் அவரது 70 வயதான கணவருக்கு இடையேயான விவகாரத்தில் உயர்நீதிமன்ற விசாரணையின் போது இளவரசி ஹயா மற்றும் ரஸ்ஸலுக்கு இடையிலான ரகசிய உறவு அம்பலமானது.

 

இளவரசி ஹயா தனது குழந்தைகளுடன் மேற்கு லண்டனின் கென்சிங்டனில் வசித்து வருகிறார்.

Hot Topics

Related Articles