உலகம்

தனிமைப்படுத்தலில் இருந்து பல பகுதிகள் விடுவிப்பு

கொழும்பு மாவட்டம் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் ( isolation area ) இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தின் பொரளை , வெல்லம்பிட்டி , கோட்டை , கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவுகள் நாளை காலை 5 மணியில் இருந்து தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றன.

கம்பஹா மாவட்டத்தின் கடவத்தை மற்றும் ஜா – எல பகுதிகளும் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றன.

இதேவேளை, கொம்பனித்தெருவின் வேகந்த மற்றும் பொரளையின் வனாத்தமுல்ல ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல்  சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும்.

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர இதர பொலிஸ் பிரிவுகளில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் அமுலாக்கம் தொடரும் என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Hot Topics

Related Articles